தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-09-13 05:12 GMT
சென்னை,

தமிழக சட்டப்பேரவை இன்று 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடியது. சட்டப்பேரவை கூடியதும் நீட் தேர்வு விவகாரம் அவையில் எதிரொலித்தது.  குறிப்பாக நேற்று அதிகாலை நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட  மாணவர் தனுஷ்  தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி  அதிமுக  எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-  நீட் தேர்வு அச்சம் காரணமாக   தனுஷ் என்ற மாணவர் தற்கொலைக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு. திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார். 

நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வந்த போது எதிர்த்த திமுக தற்போது தீர்மானம் கொண்டு வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையில் திமுக அரசு தெளிவான முடிவு எடுத்து சொல்லவில்லை. நீட் விவகாரத்தில் அரசின் நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்” என்றார். 

மேலும் செய்திகள்