மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - பொதுப்பணித்துறை
மேட்டூர் அணை நீர்மட்டம் 67ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.;
சேலம்,
தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, கடந்த சில நாட்களாக, அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 67ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. கடந்தாண்டு 4 முறை 100 அடியை எட்டிய நிலையில் இந்தாண்டு முதல்முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணைக்கு 28,650 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேட்டூர் அணையின் 88 ஆண்டு வரலாற்றில் 77-வது ஆண்டாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்திருக்கிறது.