தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update:2021-11-18 15:23 IST
சென்னை,

கோவை போலீஸ் கமிஷனர், நெல்லை, திருச்சி, வேலூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் செயலாளர் பிரபாகர் பிறப்பித்த உத்தரவில்,

* நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ராஜேஷ்கண்ணா, வேலூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதிப் குமார், கோவை மாநகர காவல் ஆணையராக செய்யப்பட்டுள்ளார்.

* சிபிசிஐடியில் சிறப்பு விசாரணை பிரிவு எஸ்.பி.,யாக மூர்த்தியும் திருச்சி எஸ்.பி.,யாக சுஜித் குமாரும்  சென்னை, உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக செல்வகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* சென்னை போலீசின் கிழக்கு சட்டம் ஒழுங்குப்பிரிவு இணை கமிஷனராக எஸ்.பிரபாகரனும் சென்னை போலீசின் தெற்கு , போக்குவரத்து இணை கமிஷனராக ராஜேந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்