சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் - அரசு ஊழியர் கைது
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.;
கோப்புப்படம்
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆஸ்டின் (47 வயது). இவர் தமிழ்நாடு ‘காதி கிராப்ட்' நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவர் கடந்த 28-ந்தேதி இரவு சென்னை சாந்தோம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, அந்த இளம்பெண் ஆன்லைன் மூலமாக மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஆஸ்டின் குறிப்பிட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. அதன்பேரில், நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.