தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடும்.

Update: 2021-12-14 23:31 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா. புவியரசன் கூறும்போது, வடகிழக்கு பருவ காற்றின் தாக்கம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 16 முதல் 18 வரை, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 18ந்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்