கோவை அருகே பனை மரத்துக்கு வாழ்வு அளித்து தார்சாலை அமைப்பு

கோவை அருகே பனை மரத்துக்கு வாழ்வு அளித்து தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-03 05:32 GMT
கோவை,

கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் வீராசாமி நகர் உள்ளது. இங்குள்ள சாலை மிகவும் மோசமாக இருந்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சிமெண்டு சாலை போடப்பட்டது.

வீராசாமி நகரில் சாலையின் நடுவே உயரமான பனைமரம் ஒன்று நின்றது. அந்தப் பனை மரம் சாலையின் நடுவே இருப்பதால் சிமெண்டு சாலை போடுவதற்கு சிரமமாக இருந்தது.

இருந்தபோதிலும் பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவு போட்டு இருந்ததாலும், பனைமரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் மேட்டுப்பாளையம் ஊராட்சி நிர்வாகம் பனை மரத்தை வெட்டி அகற்றாமல் அதற்கு வாழ்வு அளித்து சாலையை போட்டு உள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்