அரசியல் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? ஐகோர்ட்டு கேள்வி

அரசியல் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? ஐகோர்ட்டு கேள்வி.

Update: 2022-01-04 19:56 GMT
சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க., தமிழக முன்னாள் தலைவரும், தற்போது புதுச்சேரி கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க., மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் குறித்து பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமூக வலைதளத்தில் அவதூறாக பேட்டி அளித்ததாக ஏராளமான புகார்கள் போலீசில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கான்சியஸ் இளங்கோ, புகார்தாரர் சார்பில் வக்கீல் அய்யாசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, நாஞ்சில் சம்பத் தரப்பு வக்கீலிடம், ‘பிரதமர் உள்ளிட்டோரை மனுதாரர் மோசமாக பேசியுள்ளார். அரசியல் தலைவர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. அதற்கு ஒரு அளவு இல்லையா?’ என்று சரமாரியாக நீதிபதி கேள்வி கேட்டார். பின்னர், விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்