இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை கணவருக்கு அனுப்பி மிரட்டிய வாலிபர் கைது

காதலித்தபோது எடுத்த இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை கணவருக்கு அனுப்பி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-01-06 01:41 IST
கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திவான்சாபுதூரை சேர்ந்தவர் சவுரேஸ்வரன் என்கிற அஷ்வின் (வயது 23). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரிடம் நட்பாக பழக ஆரம்பித்தார். அந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் செல்போனில் பேசி வந்தனர். 

மேலும் அடிக்கடி வீடியோ காலிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் அஷ்வின் அந்த பெண்ணிடம் வீடியோகாலில் பேசியதையும், சில நேரங்களில் வீடியோ காலில் ஆடையின்றி ஆபாசமாக நிற்கசொல்லி அதை தனது செல்போனில் போட்டாவாக பதிவு செய்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை அறிந்ததும் அந்த பெண் அவருடைய காதலை கைவிட்டு, அவரிடம் இருந்து விலகினார். ஆனால் அஷ்வின் அந்த பெண்ணை தொடர்ந்து பேசுமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அந்த பெண்ணுக்கு திருமணமானது.ஆனாலும் அஷ்வின் அந்த பெண்ணை தொடர்ந்து பேசுமாறு வற்புறுத்தி வந்தார்.

 ஆனால் அந்த பெண் அவரிடம் பேசவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அஷ்வின் செல்போனில் ஏற்கனவே தான் எடுத்து வைத்து இருந்த பெண்ணின் ஆபாச போட்டோக்களை கணவருக்கு அனுப்பிவைத்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் மனைவியுடன் சென்று புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்படி அஷ்வின் மீது இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைதுசெய்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்