நாட்டின் மீன் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயர்த்த இலக்கு மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு

நாட்டின் மீன் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயர்த்த இலக்கு மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு.

Update: 2022-01-21 18:54 GMT
சென்னை,

இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. சார்பில் காணொலி வாயிலாக நடைபெற்ற, எதிர்கால தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்வள முதலீட்டுக்கான மாநாட்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

உலக மீன் உற்பத்தியில் இந்தியா 8 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்திய மீன் வளத்துறையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும். இந்த துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் இந்திய மீன்வளத்துறையை புதிய உச்சத்திற்கு அழைத்து செல்லும்.

கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு மீன் வளத்துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு பன்மடங்கு முதலீடு செய்துள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் மீன் உற்பத்தி அளவை 220 லட்சம் டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஆழ்கடல் மீன்வளத்துடன் உள்நாட்டு மீன் வளர்ப்பையும் மேம்படுத்த வேண்டும். நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டு மீன் வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் மீன் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவா் பேசினார்.

மேலும் செய்திகள்