திருவாரூர் நகராட்சி தேர்தலில் கணவன் மனைவி வெற்றி..!

திருவாரூர் நகராட்சி தேர்தலில் தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2022-02-22 05:58 GMT
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி தேர்தலில் 30 வார்டு பதவிக்கான தேர்தல் பிப்ரவர் 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் 1-வது வார்டு பதவிக்கு எஸ்.கலியபெருமாள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  இவர் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் மற்றும் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இவருடைய மனைவி மலர்விழி கலியபெருமாள், நகராட்சி 2-வது வார்டில் போட்டியிட்டார். இவர், கடந்த 24 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஒரு முறை நகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 

திருவாரூர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் போட்டியிட தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து வெற்றி பெற்ற தம்பதியை கிராம மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்