கல்வராயன் மலையில் பதுக்கி வைத்திருந்த 1500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு....!

கல்வராயன் மலையில் பதுக்கி வைத்திருந்த 1500 லிட்டர் சாராய ஊறல்களை வனத்துறை அதிகாரிகள் அழித்தனர்.

Update: 2022-03-27 09:30 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள தாழம்பூ ஓடை பகுதியில் கள்ள சாரயம் உற்பத்தி செய்வதாக மாவட்ட வன அலுவலர் சுனேஷ் சோமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி வனத்துறை அதிகாரிகள் கல்வராயன் மலையின் தாழம்பூ ஓடை பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது கள்ள சாராயம் காய்ச்சுவதற்காக 15 பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 1500 லிட்டர் சாராய ஊறலை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து பேரல்களில் இருந்த சாராய ஊறலை கீழே கொட்டி வனத்துறை அதிகாரிகள் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உள்ள வனத்துறை அதிகாரிகள், சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்