கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2022-04-12 21:12 GMT
கோவை,

கோவை மாவட்டம் கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் பழனி(வயது 45), கூலி தொழிலாளி. இவரது மனைவி கிட்டனம்மாள்(40) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஈஸ்வரன்(13), அர்ஜூனன்(12) என்ற மகன்களும் இருந்த நிலையில், சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஈஸ்வரன் 7-ம் வகுப்பும், அர்ஜூனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தான். இவர்கள் 2 பேரும் தனது தந்தை செல்போனில் கேம் விளையாடுவது உண்டு.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஈஸ்வரன், அர்ஜூனன் ஆகியோர் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது தந்தையின் செல்போனை முதலில் யார் எடுப்பது என்பது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

உடனே வீட்டில் இருந்த அக்காள் வேப்பிலைக்காரி(19) 2 பேரையும் சமாதானம் செய்து வைத்ததுடன், யாரும் செல்போனை எடுக்கக் கூடாது என்று கூறியதுடன், வீட்டில் இருந்த செல்போனை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டதாக தெரிகிறது.

கேம் விளையாட செல்போன் தராததால் மனமுடைந்த அர்ஜூனன் திடீரென வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

மேலும் செய்திகள்