தில்லை நடராஜர் குறித்து அவதூறு : யூடியூப் சேனல் மீது போலீசில் புகார்

தில்லை நடராஜர் குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூப் சேனல் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2022-05-04 04:18 GMT
கோவை:

கோவை சரவணம்பட்டி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் மண்டல பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் முருகேசன் (வயது56) நேற்று சரவணம்பட்டி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தனது செல்போனில் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது யூடியூப் சேனல் ஒன்றில் இந்துக்கள் பெரிதும் வணங்கக்கூடிய தில்லை நடராஜரையும், காளியையும் கொச்சைப்படுத்தும் விதத்திலும் பதிவு செய்து உள்ளனர். அதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எனவே இந்து கடவுளை இழிவாக பேசிய யூ டியூப் சேனல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து அந்த சேனலை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இது போல் கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்த சிவனடியார் கூட்ட மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித் என்பவரும் இந்த யூ டியூப் சேனல் மீது புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்