தமிழகத்தின் 8 மாவட்டங்ளுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை !

தமிழகத்தில் அடுட்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update:2022-05-14 13:31 IST
கோப்புப்படம்
சென்னை,

அசானி புயலுக்கு பிறகு தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய எட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. 

மேலும் செய்திகள்