செங்கம் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து - போலீசார் விசாரணை

செங்கம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.;

Update:2022-05-15 10:38 IST
செங்கம், 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ்  வந்து கொண்டிருந்தது.  இந்த பஸ் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் வனத்துறை அலுவலகம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதில் காயம் அடைந்தவர்களை மீட்டு அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்