’உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்’ - தேசிய விவசாயிகள் தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
உழைக்கும் விவசாயிகளின் தியாகம் அளவிட முடியாதது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்;
தேசிய விவசாயிகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 23ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய விவசாயிகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும் விவசாயப் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை. உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.