செல்போன் கடையில் திருடிய வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது

Update:2023-06-10 19:27 IST


காங்கயம் அருகே படியூரில் உள்ள செல்போன் கடையில் பணம் மற்றும் செல்போன்களைதிருடிய வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செல்போன்கள்-பணம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் காங்கயம், முத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது37). இவர் காங்கயம், திருப்பூர் சாலை, படியூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாள் காலை கடையை திறந்தபோது அதிர்ச்சி அடைந்தார். மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று கடையில் இருந்த 16 செல்போன்கள் மற்றும் ரூ.32 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனடியாக பாஸ்கர் இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் படியூர்- சிக்கரசம்பாளையம் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப் படும்படியான வகையில் நடந்து வந்த 3 வடமாநிலத்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த 3 பேர்களும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் (23), ரோஹித் குமார் (19), இஷ்வாக் ஹைதர் (23) என்பதும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து படியூர் பகுதியில் உள்ள செல்போன் கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றுசெல்போன்கள் மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 12 செல்போன்களை மீட்டனர்.

மேலும் செய்திகள்