'ஸ்பீக்கர் பாக்ஸ்' சரிந்து விழுந்ததில் 3 மாத பெண் குழந்தை சாவு

வீட்டில் பரணில் வைக்கப்பட்டிருந்த ‘ஸ்பீக்கர் பாக்ஸ்’ சரிந்து விழுந்ததில் 3 மாத பெண் குழந்தை சாவு;

Update:2022-06-11 21:48 IST

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சீலபந்தல் பிச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் விஜய், கூலித்தொழிலாளி.

இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை குழந்தையை வீட்டில் தரையில் படுக்க வைத்திருந்தனர்.

அப்போது வீட்டின் பரணில் உள்ள 'ஸ்பீக்கர் பாக்ஸ்' எதிர்பாராதவிதமாக சரிந்து தரையில் படுக்க வைத்து இருந்த குழந்தையின் தலையில் விழுந்தது.

இதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்