தாய்- மகனை தாக்கிய 3 பேர் கைது
வள்ளியூர் அருகே தாய்- மகனை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே மடப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த மன்னராஜா (வயது 32), குமரேசன் (27), கதிரேசன் (25), சேரன்மாதேவியை சேர்ந்த திலகன் (20) ஆகியோர் திருண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மன்னராஜாவுக்கும், குமரேசனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மன்னராஜாவின் வீட்டுக்கு குமரேசன், கதிரேசன் மற்றும் திலகன் மூவரும் சென்று அவரை அவதூறாக பேசி கம்பால் தாக்கினர். இதனை தட்டிக் கேட்ட மன்னராஜாவின் தாய் திருமால்கனியையும் அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து மன்னராஜா வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சகாய ராபின் சாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குமரேசன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தார்.