தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் - முழு விவரம்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.;

Update:2025-12-22 09:45 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TAMIL NADU OPEUNIVERSITY) சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது. 2003 - 2004 கல்வி ஆண்டு முதல் இந்த பல்கலைக்கழகம் பல்வேறு நிலையில் கல்வி சேவை செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான படிப்புகளை நடத்தி சாதனை புரிந்து வருகிறது. சுமார் 234 வகையான படிப்புகளை பல்வேறு பாடங்களில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை மாணவ மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறுகிய கால சான்றிதழ் படிப்புகள், விடுமுறை கால டிப்ளமோ படிப்புகள் மற்றும் மேம்பட்ட டிப்ளமோ படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தியாவில் சுமார் 16 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தாலும் அவற்றுள் முறையாக பல்கலைக்கழக மானிய குழுவின் (UNIVERSITY GRANT COMMISSION) 12 B அந்தஸ்தை பெற்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது.

சமுதாயத்தில் பல்வேறு காரணங்களால் பின்தங்கிய, நலிவடைந்த, பாதிக்கப்பட்ட மக்கள் மேல்நிலைக் கல்வி பெற இந்த பல்கலைக்கழகம் அடித்தளமாக அமைகிறது. தரமான உயர் கல்வியை வழங்கியும் நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத மாணவ, மாணவிகளுக்கு தொலை தூரத்திலிருந்து கல்வி பயிலும் வாய்ப்பை இந்த பல்கலைக்கழகம் ஏற்படுத்தி தருகிறது.

தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்த பல்கலைக்கழகம், சமுதாய மாற்றத்திற்கான கல்வியை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது. குறிப்பாக கல்வியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது.

பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் விவரம்:

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட படிப்புகளை நடத்தி வருகிறது.

I. பட்டப் படிப்புகள் (UNDER GRADUATE PROGRAMMES) - (CALENDAR YEAR)

1. B.B.A

2. B.A TAMIL

3. B.A SOCIALOGY

4. B.A ECONOMICS

5. B.A HISTORY

6. B.A ENGLISH

7. B.A POLITICAL SCIENCE

8. B.COM

9. B.C.A

10. B.SC MATHS

II. பட்டப் படிப்புகள் UNDERGRADUATE SCIENCE PROGRAMMES (ACADEMIC YEAR ONLY)

1. B.Sc CHEMISTRY

2. B.Sc BOTANY

3. B.Sc PHYSICS

4. B.Sc ZOOLOGY

III. தொழிற்கல்வி (VOCATIONAL DIPLOMA PROGRAMMES)

1. GENERAL DUTY ASSISTANT

2. REFRIGERATION AND AC TECHNICIAN

3. VEHICLE MECHANIC

4. BEAUTY THERAPIST

5. OFFICE AUTOMATION

6. IN-DESIGN

7. ACUPRESSURE THERAPIST

8. EARLY CHILD CARE AND EDUCATION

9. FASHION DESIGN AND GARNMENT MAKING

10. INDUSTRIAL FITTER

11. WELDING TECHNOLOGY

IV. பட்ட மேற்படிப்புகள் (POST GRADUATE PROGRAMMES) (CALENDAR YEAR)

1. M.A TAMIL

2. M.A POLITICAL SCIENCE

3. M.A SOCIOLOGY

4. M.A HISTORY

5. M.A ENGLISH

6. M.A CRIMINAL AND CRIMINAL JUSTICE ADMINISTRATION

7. M.COM

8. M.S.W

9. M.B.A

10. M.SC MATHS

V. பட்ட மேற்படிப்புகள் (POST GRADUATE SCIENCE PROGRAMMES) (ACADEMIC YEAR ONLY)

1. M.Sc ZOOLOGY

2. M.Sc PHYSICS

3. M.Sc BOTANY

4. M.Sc GEOGRAPHY

VI. சான்றிதழ் படிப்புகள் (CERTIFICATE PROGRAMMES)

1. MODERN TECHNIQUES AND TECHNOLOGY IN TEACHING

2. BS-VI : EMISSION STANDARDS

3. ICT IN FUNCTIONAL TAMIL

4. CONSERVATION TECHNIQUES

5. BRAIN BASED LEARNING TECHNIQUES

6. ADVANCED TECHNOLOGICAL APPLICATIONS IN TEACHING MATHEMATICS

7. ADOLESCENCE EDUCATION

8. AQUACULTURE

9. CHEMICAL LABORATORY SAFETY MANAGEMENT

10. ENVIRONMENTAL CONSERVATION

11. CLIMATE CHANGE

12. ENTREPRENEURSHIP DEVELOPMENT

13. SILAMBAM

14. THIRUKKURAL

VII. உயர் சிறப்புத் தொழிற்பயிற்சி டிப்ளோமா படிப்புகள் (ADVANCED VOCATIONAL DIPLOMA PROGRAMMES)

1. GENERAL DUTY ASSISTANT (T/E)

2. GENERAL DUTY ASSISTANT (T/E) (LE)

VIII. டிப்ளோமா படிப்புகள் (DIPLOMA PROGRAMMES )

1. ARCHAEOLOGY AND EPIGRAPHY

2. WILDLIFE TOURISM

3. TOURISM AND TOUR OPERATIONS MANAGEMENT

4. JOURNALISM

5. NUTRITION AND HEALTH EDUCATION

6. MEDIA ARTS

7. SILAMBAM

8. HUMAN RIGHTS

9. INTERNATIONAL RELATIONS

10. RESEARCH AND METHODOLOGY

IX. குறுகிய கால படிப்புகள் (SHORT TERM COURSES)

1. DR B.R AMBEDKAR THOUGHTS

2. LOGISTICS AND SUPPLY CHAIN MANAGEMENT

3. OFFICE AUTOMATION

4. BASIC COMPUTER OPERATIONS

5. INDUSTRIAL SAFETY AND SECURITY

6. COLD STORAGE MANAGEMENT

7. BEAUTICIAN

8. TAILORING AND DRESS MAKING

9. LIVE SKILLS AND PERSONALITY DEVELOPMENT

10. SURFACE EMBELLISHMENT

11. SOCIAL JUSTICE

12. ROAD SAFETY AND FIRST AID

13. GNANA TAMIL

14. THEATRE ARTS

15. THIRUKKURAL.

மேலும் விவரங்களுக்கு:

கீழ்க்கண்ட முகவரியில் இயங்கும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண்டு இந்தப் படிப்புகள் பற்றிய தெளிவான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பல்கலைக்கழக முகவரி:

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,

என் 577, அண்ணா சாலை

சைதாப்பேட்டை,

சென்னை 600 015.

மண்டல மையங்கள்:

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு கீழ்க்கண்ட இடங்களில் இயங்கும் மண்டல மையங்களோடு (REGIONAL CENTRES) தொடர்பு கொள்ளலாம்.

1. சென்னை (9345913385)

2. மதுரை (9345913388)

3. கோயம்புத்தூர் (9345913386)

4. மயிலாடுதுறை (9345913393)

5. விழுப்புரம் (9345913380)

6. தர்மபுரி (9345913387)

7. திருநெல்வேலி (9345913392)

8. சேலம் (9345913373)

9. திருச்சி (9345913391

10. நீலகிரி (9655817915)

11. திருவண்ணாமலை (9345913374)

12. சிவகங்கை (9345913375).

இவை தவிர, www.tnou.ac.in என்னும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு மேலும் பல தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்