திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது
செம்பனார்கோவில் பகுதியில் திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.;
திருக்கடையூர்:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் சந்தை மேட்டு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சம்மாள் என்கிற ரேகா (வயது 47). தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா கழனிவாசல் சோழனார் வயல் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மனைவி ராணி (48). கோவை மாவட்டம் உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் மனைவி நதியா (37). இவர்கள் பஸ்சில் வரும் பெண் பயணிகளிடம் தொடர்ச்சியாக நகை, பணம் போன்றவற்றை திருடும் வழக்கம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் செம்பனார்கோவில் அருகே உள்ள திருச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மகளிர் மத்திய சிறையில் அடைத்தனர்.