தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை திருட்டு

கோவையில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-03-20 00:15 IST

கோவை

கோவையில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழில் அதிபர்

கோவை குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகரை சேர்ந்தவர் சிவன் (வயது 45). இவர் அந்த பகுதியில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராணி. சம்பவத்தன்று சிவன் காலை 7 மணிக்கு வழக்கம்போல் கம்பெனிக்கு சென்றுவிட்டார். இதனால் ராணி மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் காலை 11 மணிக்கு ராணியும் வீட்டை பூட்டிவிட்டு கம்பெனிக்கு சென்றார்.

பின்னர் மதியம் 2 மணிக்கு ராணி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

33 பவுன் நகை திருட்டு

அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 33 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்து. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு, மர்ம நபர்களை நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். மேலும் குனியமுத்தூர் போலீசில் அளித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தொழில் அதிபரின் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியடைந்த ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்