38 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 38 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனா்.;
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட சீரியஸ் கிரைம் பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தண்டபாணி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், மரக்காணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கேத்தரின் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், ரோஷணை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கும், இவர்கள் உள்பட போலீஸ் ஏட்டுகள், போலீஸ்காரர்கள் என மொத்தம் 38 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.