சென்னையில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 4 விமானங்கள் ரத்து

டெல்லியில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Update: 2022-05-23 08:27 GMT

சென்னை,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கோடையை முன்னிட்டு தினமும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. நாள்தோறும் கடுமையான வெப்பத்தினால் பொதுமக்களின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று அதிகாலை விஜய் சவுக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசாக சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றும் வீசியது. பல இடங்களில் மழைநீர் சாலைகளில் ஓடிய நிலையில், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சற்று மெதுவாக சென்றன.

டெல்லியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நிலவும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தவித முன் அறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்