குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-08-26 01:40 IST

திசையன்விளை அப்புவிளை, சாமிதாஸ் நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 19). இவரை கடந்த மாதம் 23-ந்தேதி முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் அப்புவிளையை சேர்ந்த வேலு என்பவரின் மகன் சுரேஷ் (19), முருகன் மகன் பிரகாஷ் என்ற ஜெயப்பிரகாஷ் (30), பெருமாள் மகன் மதியழகன் (31) ஆகியோரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் சுரேஷ் உள்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.

இதேபோல் கல்லிடைக்குறிச்சி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ஆத்தியடி இல்லத்தார் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் மாசானம் (24) என்பவரையும் கலெக்டர் உத்தரவுபடி கல்லிடைக்குறிச்சி போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்