சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது;
ஆனைமலை
ஆனைமலை அடுத்த இருட்டு பள்ளம் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 27),பாய் கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (24), கவுண்டம்புதூர் பகுதியைச் சேர்ந்த முகமது அஜீஸ் (24) உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மனோகரன் (22) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.