விருத்தாசலத்தில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
விருத்தாசலத்தில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விருத்தாசலம் பகுதியில் தனித்தனி இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஜெயங்கொண்டம் அடுத்த இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 33), விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்த அகமதுல்லா (47), சதீஷ் (30), திரு.வி.க.நகர் சின்னசாமி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 40 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.