மூதாட்டியிடம் நகை திருடியவருக்கு 4 ஆண்டு சிறை

திருவாடானை பகுதியில் மூதாட்டியிடம் நகை திருடியவருக்கு 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.;

Update:2023-06-24 00:15 IST

தொண்டி, 

சிவகங்கை மாவட்டம் புளியாலைச் சேர்ந்தவர் சூரியகுமார்(வயது 49). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.மங்கலம் கோட்டை யம்மாள்(62), கண்ணுகுடி பகவதி (62), சனவேலி ஆர்.எஸ்.மங்கலம் பொன்னம்மாள் ஆகியோரிடம் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக திருவாடானை கோர்ட்டில் அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சூரிய குமாருக்கு திருவாடானை நீதிபதி பிரசாந்த் ஒவ்வொரு வழக்கிலும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்