எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது - இந்திய கடற்படை நடவடிக்கை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை கைது செய்துள்ளது.;

Update:2022-10-15 09:32 IST


தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் இதற்கு மாறாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்