இசைக்கலைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி; வாலிபர் கைது

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இசைக்கலைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மீட்கப்பட்டது.;

Update:2022-08-04 23:05 IST

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இசைக்கலைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மீட்கப்பட்டது.

ரூ.55 லட்சம்

மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியை சேர்ந்தவர் பூரணச்சந்திரன் (வயது 25). இவர், ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி சீர்காழி தாலுகா திருப்புங்கூர் கிராமத்தை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் செந்தில்குமரன்(52) மற்றும் சீர்காழி, திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 இசைக்கலைஞர்களிடம் ரூ.55 லட்சம் பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான விசா கொடுத்துள்ளார். கடந்த மாதம் 28-ந் தேதி இசைக்்கலைஞர்கள் 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

போலி விசா

அவர்களை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பூரணச்சந்திரன் தலைமறைவாகி விட்டார்.

விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கும் வழங்கப்பட்ட விசா போலி என்பது தெரியவந்தது.

வாலிபர் கைது; ரூ.12 லட்சம் மீட்பு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செந்தில்குமரன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூரணச்சந்திரனை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் பதுங்கியிருந்த பூரணச்சந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.12 லட்சத்தை போலீசார் மீட்டனர். இதை தொடர்ந்து அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்