பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-05-08 21:33 IST

வடமதுரை அருகே உள்ள ஆண்டியப்பட்டி பகுதியில், வடமதுரை போலீஸ் ஏட்டு திருப்பதி, போலீஸ்காரர் விவேக் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வேடன்குளத்தின் கரையில் அமர்ந்து 6 பேர் கொண்ட கும்பல், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

இதனைக்கண்ட போலீசார், அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கம்பிளியம்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 50), செல்வராஜ் (55), ராஜசேகரன் (42), திருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் (48), காட்டுப்பட்டியை சேர்ந்த பழனி (60), முருகேசன் (43) என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தார். இவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்