பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்: இருவர் கைது
பெண் கூச்சலிட்டதால் அந்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.;
சேலம்,
சேலம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு நெத்திமேடு மண்டபம் பஸ் நிறுத்த பகுதியில் நின்று இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 35), நடராஜன் (36) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.