வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு 6 குளிர்சாதன பெட்டிகள்
வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு 6 குளிர்சாதன பெட்டிகள்
வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தாலுகா ஆஸ்பத்திரியாகவும், தலைமை ஆஸ்பத்திரியாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு இறந்தவர்களின் உடலை பாதுகாக்க ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகளை ஆஸ்பத்திரிக்கு ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. வழங்கினார். தலைமை மருத்துவர் முருகப்பா வரவேற்றார். இதில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், துணைத்தலைவா் அறிவழகன், மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான சுப்பையன், நகரச்செயலாளர் நமசிவாயம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.