ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.;

Update:2025-12-14 11:57 IST

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சியை அபகரிக்க அன்புமணி ராமதாஸ் முயற்சிப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டி வருகிறார். அதேவேளை, தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை விண்ணப்பிக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்