திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் கடந்த 23-ந்தேதி மீண்டும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இது குறித்து அவினாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிந்த நிலையில் திருப்பூர் மகிளா கோர்ட்டு, கண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.போக்சோ வழக்கில் வாலிபருக்கு7 ஆண்டு சிறை