பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

பொள்ளாச்சியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update:2023-09-19 02:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூதாட்டம்

பொள்ளாச்சி மகாலட்சுமி நகரில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது சிலர் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பணம் பறிமுதல்

விசாரணையில் அவர்கள் டி.கோட்டாம்பட்டி மகாலட்சுமி நகரை சேர்ந்த வெங்கடாச்சலம் (வயது 50), மாக்கினாம்பட்டியை சேர்ந்த கண்ணதாசன் (30), கப்பளாங்கரையை சேர்ந்த சிவகுமார் (45), ராசக்காபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (48), சண்முகம் (45), கோப்பனூர்புதூரை சேர்ந்த செல்வகுமார் (54), ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (43), கொள்ளுப்பாளையத்ைத சேர்ந்த மணிகண்டன் (42) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்