141 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் நலத்திட்ட உதவிகள்
141 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.;
அரக்கோணம் ஒன்றியம் வளர்புரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு திட்டத்தில் மொத்தம் 141 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் 2 ஆயிரத்து 90 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி வழங்கி பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற பே-டி.எம். மூலம் மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை தொடங்கி வைத்து, அதற்கான பே-டி.எம். கருவிகளை ரேஷன் கடை பயன்பாட்டிற்காக விற்பனையாளர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமாரி மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.