பொன்னேரியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்
பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது.;
வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கிறிஸ்துமசை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஊர்வலங்கள், பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறுகின்றன.
அவ்வகையில் பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. பிஷப் ஞானராஜ் தலைமையில் பாஸ்டர் லாசர்டேனியல், ஜான்ராஜ், ஜான்பாபு, மனோகரா முன்னிலை வகித்தனர். இதில் ஏராளாமனோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து அம்பேத்கர் சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து கிறிஸ்து பிறப்பு பாடல் பாடியபடி நடனம் ஆடி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு தலைவர் லியோ நெல்சன், பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். ஒருங்கிணைப்பாளர் ஜெபஸ்டின் இன்பராஜ் மற்றும் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.