கடந்த 2 நாட்களில் திருப்புவனத்தில் 96.50 மி.மீ. மழை பதிவு

கடந்த 2 நாட்களில் திருப்புவனத்தில் 96.50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.;

Update:2023-09-20 00:15 IST

திருப்புவனம்

திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று முன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு இரவு நேரம் பலத்த மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த 17-ந் தேதியும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கடைகளில் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. மேலும், கிராம பகுதிகளில் சாலைகள், வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நின்றது. திருப்புவனம் நகர் பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. இந்த மழையால் குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த 17-ந் தேதி பெய்த மழை அளவு 56.20 மில்லி மீட்டர் ஆகும். நேற்று முன்தினம்(18-ந் தேதி) பெய்த மழை அளவு 40.30 மில்லி மீட்டர் ஆகும். 2 நாட்களில் மொத்தம் 96.50 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்