தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி

ஊட்டி அருகே 16 வயது சிறுமி தூக்கில் பிணமாக ெதாங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-25 02:45 IST

ஊட்டி

ஊட்டி அருகே 16 வயது சிறுமி தூக்கில் பிணமாக ெதாங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநில சிறுமி

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் அக்தாங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளுடன் நீலகிரி மாவட்டம் தாம்பட்டி பகுதிக்கு வந்தார். பின்னர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, அந்த பகுதியில் மனைவியுடன் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அக்தாங் தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது, அவரது மகள் சுகானா(வயது 16) தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

சந்தேக மரணம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்தாங், உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுகானாவை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுகானா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருடைய உடலை லவ்டேல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் விசாரணை

முதற்கட்ட விசாரணையில், சகானாவுக்கு மன அழுத்த பிரச்சினை இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் போலீசார் ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்