மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.;

Update:2023-01-30 00:35 IST

அரிமளம் அருகே ராயவரம் கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 60). இவர் நேற்று முன்தினம் ராயவரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மூதாட்டி அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்ேபரில், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்