அம்பேத்கர் புகழைப் போற்றுவோம்; அவர் கொள்கை பாதையில் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா
சமத்துவம், சமூகநீதி சமூகத்திற்கான வழிகாட்டி, நமது கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.;
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை கற்றுத்தரும் மதத்தை நான் விரும்புகிறேன்' என்றவர் புரட்சியாளர் அம்பேத்கர். 'எல்லோரும் சமம்' என்று அவர் உருவாக்கித் தந்த அரசியலமைப்பு சட்டம் உலகின் ஆகச்சிறந்த ஜனநாயகத்தை அறிவித்தது. அதன் சமத்துவ கோட்பாடுகள் மேன்மைமிக்க சமூகத்திற்கான லட்சியத்தைக் கொண்டிருக்கிறது.
மதப்பெரும்பான்மைவாத சக்திகளுக்கு எதிரான கொள்கை அரண், மதச்சார்பின்மையின் நாயகர், சமத்துவம், சமூகநீதி சமூகத்திற்கான வழிகாட்டி, நமது கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம். அவர் கொள்கை பாதையில் பயணிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.