மணவாளக்குறிச்சி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதல் 3 பேர் படுகாயம்

மணவாளக்குறிச்சி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதல் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2023-05-09 02:35 IST

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் அய்யாப்பழம். இவருடைய மகன் சந்திரன் (வயது 35). சம்பவத்தன்று இவர் திருநயினார்குறிச்சி ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த மணி (68), கோபிநாத் (67) ஆகியோரும் பொருட்கள் வாங்க கடை முன்பு காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பொருட்கள் வாங்க காத்திருந்த 3 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சந்திரன், மணி, கோபிநாத் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் விபத்தை ஏற்படுத்தியதும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

மேலும் இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்