தொண்டி,
திருவாடானை தாலுகா கடம்பாகுடி கிராமத்தின் அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி சென்ற டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராமமூர்த்தி(வயது 52) காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக திருவாடானை போலீசார் விசாரித்து வருகின்றனர்.