மனைவியை தாக்கிய வியாபாரி மீது வழக்கு

தேனியில் மனைவியை தாக்கிய வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-03-18 00:15 IST

தேனி சமதர்மபுரத்தை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது 42). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி சவுமியாதேவி (38). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. விஜயசாரதி மதுபோதையில் தனது மனைவியை அடிக்கடி தாக்கி கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயசாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்