டெங்கு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

டெங்கு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-01 14:50 GMT

பருவ மழையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் தாமோதரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் கூறுகையில்:-

பருவ மழை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள் தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். டெங்கு புழுக்கள் உருவாக காரணமாக இருக்கும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சட்டப்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்