அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு பலி
அரக்கோணம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு இறந்தது.;
அரக்கோணம்
அரக்கோணம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியதால் அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் அருகே வயல் வெளியில் மின் கம்பம் சாய்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலுக்கு சொந்தமான பசு மாடு அந்த பகுதியில் மேய்ச்சலக்கு சென்றது,.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கடந்து சென்ற பொழுது மின் கம்பியில் சிக்கியதில் அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இது குறித்து வளர்புரம் கிராம நிர்வாக அலுவலர் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சார தடை செய்து பசுவின் உடலை மீட்க ஏற்பாடு செய்தார். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.