நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து

சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.;

Update:2023-08-28 00:15 IST

சீர்காழி:

சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது. இங்கு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன கடந்த சில மாதங்களாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை உரமாகவும், மக்கா குப்பை மறு சுழற்சி செய்ய வெளியில் அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகைமண்டலமாக மாறியதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்