அந்தியூர் அருகே புறா பிடிக்க கிணற்றில் இறங்கிய தொழிலாளி தவறி விழுந்து சாவு

அந்தியூர் அருகே புறா பிடிக்க கிணற்றில் இறங்கிய தொழிலாளி தவறி விழுந்து சாவு

Update: 2023-09-16 20:24 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே முரளி சென்னம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த பிணத்தை மீட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 'கிணற்றில் பிணமாக மிதந்தவர் சென்னம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது40). திருமணம் ஆகாதவர். விவசாய தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள 120 அடி ஆழமுடைய விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் மாலை புறா பிடிப்பதற்காக ரப்பர் டியூப் கட்டி இறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டியூப் அறுந்ததில் அவர் தவறி விழுந்து 20 அடி தண்ணீரில் மூழ்கி இறந்தார்' என்பது தெரியவந்தது.

பிணத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்