பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதைக்கான சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.;

Update:2025-12-17 09:45 IST

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

2-ம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரெயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடத்தில் 3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதைக்கான சிக்னல் கட்டமைப்புக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரியில் இருந்து இத்தடத்தில் ரெயில்கள் இயக்கவும், பிப்ரவரி இறுதிக்குள் போரூர் கடந்து நேராக வடபழனிக்கு ரெயில் சேவை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. போரூர் - வடபழனி இடையே ரெயில் நிலையப் பணிகள் முடிவடையாததால் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்